தமிழகத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை மற்றும் பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் மசோதாவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 திங்கட்கிழமை தொடங்கியது. ஆனால், திடீரென உரையை நிகழ்த்தாமல் அவையில் இருந்து வெளியேறினார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. தேசிய கீதம் முதலில் இசைக்கப்படாததால்தான் ஆளுநர் வெளியேறினார் என்று கூறப்படுகிறது. 2 நாள் கூட்டத்தொடரின்போது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
மூன்றாம் நாளான நேற்று அண்ணாப் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது. அதில், சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம், யார் அந்த சார்? என்பதை கண்டுபிடிப்பது என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று 4-வது நாளாக தொடங்கிய சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்டம் இன்று பேரவையில் அறிமுகம் செய்யப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். அதாவது, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரமும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரமும் பேரவையில் எதிரொலிக்கும் நிலையில், குற்றங்களுக்கு மிக, மிக கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில், மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மரண தண்டனை
* 18 வயதுக்குட்பட்ட பெண்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
* ஏற்கனவே பாலியல் வன்கொடுமை சம்பந்தபட்டவர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
* காவல்துறை ஊழியர், அவரது உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் 20 ஆண்டுகள் குறையாத தண்டனை வழங்கப்படும்.
* பெண்களை பின் தொடர்ந்தால் பிணையில் விடுவிக்காதபடி, 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
* பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
* பெண்கள் மீது ஆசிட் வீசினால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Read More :
பெட்டிக்குள் 3 பிஞ்சு குழந்தைகளின் சடலம்!. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை!. என்ன நடந்தது?.