தனது மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையோடு மாமியார் ஓடிப்போன சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் சப்னா என்பவரின் மகளுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், நிச்சய ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்த சமயத்தில் தான், வருங்கால மாப்பிள்ளை ராகுலுடன் மாமியார் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார். அவர் செல்லும் போது, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் இதனை சப்னா மறுத்த நிலையில், ஓடிப்போன மாப்பிள்ளை ராகுலுடன் அவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். வாழ்ந்தால் அவரோடு தான் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார்.
இந்நிலையில், சப்னாவின் 2 வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தன்னுடைய கணவர் ஆண்மை தன்மை இல்லாதவர் என்றும், அவர் அடிக்கடி குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்துவார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், என்னிடம் அவர் பணம் கொடுப்பதே இல்லை என்று கூறியுள்ள சப்னா, என் கணவர் என்னிடம் ஒருநாள் கூட அன்பாக இருந்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு பெண் எதிர்பார்ப்பாது அன்பு தான். ஆனால், அது எனக்கு கிடைக்கவில்லை. அவருடன் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்ல்லை.
இதனால், தற்போது ராகுலுடன் வாழ முடிவு செய்திருக்கிறேன். என் கணவருடன் சேர்ந்து என் மகளும் என்னை அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். அதன் பிறகு தற்போது ராகுலுடன் சென்ற சப்னா கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்வதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.