எடப்பாடி அருகே பனைமரம் ஏறியபோது, தேனீக்கள் கொட்டியதில் மரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கவுண்டம்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அருண்குமார் (23). முதுநிலை பட்டதாரியான இவர், கிடைத்த கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டிற்கு அருகே உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக மரம் ஏறியுள்ளார்.

அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் கொட்டியதில், நிலைதடுமாறிய அருண்குமார் மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அருண்குமாருக்கு உடல், தலை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மீட்ட குடும்பத்தினர், எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலிதவி சிகிச்சை பெற்ற அருண்குமார், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : தனது மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையோடு ஓடிப்போன மாமியார்..!! கர்ப்பமாக இருப்பதால் ஆடிப்போன கணவர்..!! வைரலாகும் வீடியோ..!!