11 வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவலரை(38) போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீப காலங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை வழங்கும் சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்தநிலையில், கரூர் மாவட்டம் அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, இளவரசன் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதையடுத்து, எல்லை மீறி காவலர் இளவரசன் சிறுமியை வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இளவரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தி சிறையில் அடைத்தனர்.
Readmore: நடுங்கும் தலைநகரம்!. அண்ணன், தம்பி ஓட ஓட வெட்டி கொலை!. 6 தனிப்படைகள் அமைப்பு!. தீவிர விசாரணை