பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் தண்டனை விதிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளன நிலையில், தலைநகர் சென்னையில் இளைஞர்கள் சிலர், திமுக கொடி கட்டிய காரில், இளம்பெண்களை துரத்தி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து, கடந்த 25ம் தேதி ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த சட்டத்திருத்தம் அன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இளைஞர்கள் சிலர், திமுக கொடி கட்டிய காரில், இளம்பெண்களை துரத்தி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திமுக கட்சி கொடியோடு கார் ஒன்று சென்னை இசிஆர் சாலையில் நடு ரோட்டில் நிற்கிறது. அதில் இருந்து இளைஞர் ஒருவர் வேகமாக இறங்கி பின்னால் நிற்கும் பெண்கள் வந்து கொண்டிருந்த காரை நோக்கி ஓடி வருகிறான். இதனால் பயந்து அலறிய இளம்பெண்கள் கதறி துடிக்கிறார்கள். அதற்குள் காரை பின் முன்பக்கமாக எடுக்கும்போது காரின் கதவை அந்த இளைஞர் தட்டுகிறார்.

இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தங்களது உறவினர்களுக்கு அந்த பெண் போன் செய்ய கூறுகிறார்கள். இதனையடுத்து சினிமா படத்தில் வருவது போல் பின் பக்கமாக ரிவர்ஸ் எடுத்து காரை வேறு பக்கமாக இயக்குகிறார்கள். இருந்த போதும் அந்த காரை விடாமல் துரத்தும் இளைஞர்கள் ஒரு கட்டத்தில் காரை மறித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து . இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளநிலையில், திமுக கட்சி கொடியுடன் இந்த இளைஞர்கள் செய்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Readmore: இனி இந்த வாகன காப்பீடு இல்லையென்றால் பெட்ரோல், டீசல், ஃபாஸ்டேக் கிடைக்காது!. அமலுக்கு வரும் புதிய விதி!. மத்திய அரசு அதிரடி!.