பல்லடம் அருகே வகுப்பறைக்குள் மனித கழிவுகளை வீசிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் பள்ளி நேரம் முடிந்தவுடன் பூட்டிவிட்டு ஆசிரியர்கள் சென்றுள்ளனர். இதையடுத்து வழக்கம்போல் நேற்று காலையில் பள்ளிக்கு மாணவர்கள் திரும்பியுள்ளனர். அதாவது, 10ம் வகுப்புக்கான அறைக்கு மாணவர்கள் சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள ஜன்னலிலும் மாணவர்கள் உட்காரும் இருக்கையிலும் மனிதக் கழிவுகளை மர்ம நபர்கள் வீசி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தலைமை ஆசிரியரிடம் அளித்த புகாரின் பேரில், பல்லடம் டிஎஸ்பி தலைமையிலான காமநாயக்கன்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வகுப்பறையில் மனித கழிவை வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். “பள்ளியில் பயிலும் மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்களா அல்லது மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Readmore: வெறும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!. போஸ்ட் ஆபீஸில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!. 65,000 காலிப்பணியிடங்கள்!. விண்ணப்பிப்பது எப்படி?