வரும் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பட்ஜெட் வந்தாலே வருமான வரிக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படுவது பொருட்களின் விலைதான். அதிலும் கடந்த 5 ஆண்டுகால பட்ஜெட்டில் நாம் நினைத்தும் பார்க்காத சில பொருட்களி விலை கிடுகிடுவென உயர்ந்தது, அதுவும் பட்ஜெட்டால்தான். அந்தவகையில் இந்த ஆண்டு பட்ஜெட் வழக்கமான எதிர்பார்புகளுடன் வருகிறுது என்று கூறப்படுகிறது. சரி பட்ஜெட்டிற்குப்பிறகு எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எந்தெந்த பொருட்களி விலை அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

கடந்த 2023ம் ஆண்டு பட்ஜெட் அமர்வின் போது, ​​டிவிக்கள், ஸ்மார்ட்போன்கள், சுருக்கப்பட்ட எரிவாயு, இறால் தீவனம் போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன, அதேசமயம் சிகரெட், விமானப் பயணம் மற்றும் ஜவுளி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இதேபோல், 2024 பட்ஜெட்டில் செல்போன், தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட பொருட்களுக்கு சுங்கவரியை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், செல்போன்கள், உதிரி பாகங்கள், செல்போன் சார்ஜர்களுக்கு சுங்க வரி 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஸ்மார்ட் போன்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு 6 சதவீதம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 6.4 சதவீதம் சுங்க வரி குறைக்கப்பட்டது. இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கு சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டது. அமோசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்திற்க வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் விலை அதன் மூலப்பொருளான அம்மோனியம் நைட்ரேட்டின சுங்க வரி 10-ல் இருந்து 15 சதவீதமாக அதிகரிப்பால் தொலைத்தொடர்பு சாதனங்களின் விலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். அதில் விலை குறைக்கப்படும், விலை அதிகரிக்கப்படும் பொருட்கள் குறித்தான பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், டிஜிட்டல் பொருட்களைப் பயன்படுத்த பொதுமக்களை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்து வருவதால், அந்த பொருட்கள் மீதான விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டால், இதன் விளைவாக, மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவிகள், மடிக்கணினிகள் போன்றவை குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது. மின்னணு பொருட்கள் என்பது மொபைல் போன்கள் மட்டுமல்ல, ஸ்மார்ட் டிவிகள் முதல் மடிக்கணினிகள் வரை பலவற்றையும் உள்ளடக்கியது. எனவே, வரிச் சலுகை அறிவிக்கப்பட்டால், இதுபோன்ற அனைத்து பொருட்களின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் பயன்பாட்டுக் கட்டணமும் குறைய வாய்ப்புள்ளது! தற்போது, அதிகரித்து வரும் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிமக் கட்டணம் மற்றும் உலகளாவிய சேவை கடமைக் நிதியைக் குறைக்கக் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகள் அதிகரித்து வருவதை தடுக்கலாம்.

Readmore: சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!. கடன் பிரச்சனையால் வெள்ளி பட்டறை உரிமையாளர் விபரீத முடிவு!. தீவிர விசாரணை!