சேலம் மாவட்டம் அரசிராமணி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்துவதற்கு பேரூராட்சிக்கு சொந்தமான இடமோ, போதிய இடவசதியோ இல்லாத காரணத்தால், தற்காலிகமாக குஞ்சாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மயானம் அருகே உள்ள காலியிடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், இப்பகுதியில் குப்பைகளை கொட்டக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, அரசிராமணி குறுக்குப்பாறையூர் பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறுக்குப்பாறையூரில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் குப்பைகளை கொட்டி வருவதால், அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பல இடங்களில் அரசு நிலங்கள் இருந்தும் வேண்டுமென்றே எங்கள் பகுதியில் குப்பைகளை கொட்டி வருவதாகவும், இதனால் எங்கள் ஊரின் விவசாய நிலங்கள், குடித் தண்ணீர் மற்றும் ஏரி, குளங்கள் இருந்து வருவதால், எங்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஜனவரி 2ஆம் தேதி Idp7News-இல் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், பல அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்த ஒரு பயனும் இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று (ஜனவரி 6) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், தேவூர் காவல் ஆய்வாளர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
Read More : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்!. இன்னும் 4 நாட்களில் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு!. வெளியான புதிய தகவல்!