சேலத்தில் துக்க நிகழ்ச்சிக்காக சென்ற நிலையில் அரசு கல்லூரி முதல்வர் வீட்டில் 50 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே, வடசென்னிமலை, எம்.பி., நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஆத்துார் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா, அதே கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளராக உள்ளார். இந்தநிலையில், கடந்த, 23ம் தேதி, செல்வராஜின் மாமனார் ராமசாமி இறந்ததால், வீட்டை பூட்டிவிட்டு, தலைவாசல் அருகே பெரியேரிக்கு, குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர்.

இதையடுத்து, ஜன.25ஆம் தேதி மதியம், 2:30 மணிக்கு, செல்வராஜ் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, இரு பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 51 சவரன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம். உயர் ரக பட்டு சேலைகள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் கூடுதல் எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையில், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் உள்ளிட்ட ஆத்துார் ஊரக போலீசார், சம்பவ வீட்டில் ஆய்வு செய்தனர்.

செல்வராஜின் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ‘சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிகாலை, 2:00 மணி அளவில் முகமூடி அணிந்த இருவர் வீட்டிற்குள் சென்றதும், பூட்டுகளை உடைத்து பணம், நகை திருடிச்சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Readmore: கைத்தறி நெசவாளர்களுக்கு குட்நியூஸ்!. சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.