சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியை மிரட்டி, பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்று பைக் வாங்கிய தம்பியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுங்காரம். இவரது மனைவி பானுமதி. இந்த தம்பதிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. பானுமதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், குழந்தையை அவரது தாயார் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. பானுமதிக்கு ரமேஷ் என்ற தம்பியும் அவருடைய மனைவி கார்த்திகா ஆகிய அதே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், தம்பி ரமேஷும், அவரது மனைவியும் சேர்ந்து, பானுமதியின் குழந்தையை விற்றுவிடலாம் என்று முடிவெடுத்து அவரது தாயாரிடம் யோசனை கொடுத்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதனை அறிந்த பானுமதியின் கணவர் சுங்காரம், ரமேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரை மிரட்டி அடிப்பணிய வைத்துள்ளனர். இதையடுத்து, கிருஷ்ணகிரியை சேர்ந்த தம்பதியினரிடம் ரூ.3.20 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு குழந்தையை விற்க முயன்றுள்ளனர். அந்த பணத்தில் ரமேஷ்-கார்த்திகா தம்பதியினர் புதிய பைக் ஒன்றை வாங்கிக்கொண்டு, மீதி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பானுமதியிடம் கொடுத்துவிட்டு யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பானுமதியும், அவரது தாயாரும் வீட்டை விட்டு வெளியே வராமலும், குழந்தையின் அழுக்குரல் கேட்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கதினர், பானுமதியிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து, பானுமதி உண்மையை தெரிவித்த நிலையில், பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி விரைந்த போலீசார், குழந்தையை பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து மீட்டனர். இதையடுத்து மீண்டும் குழந்தை பானுமதியிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறந்து 15 நாட்களே ஆன நிலையில் அதை விற்க முயன்ற தம்பி-கார்த்திகா தம்பதியினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: “எத்தன பேரு டி”!. போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கள்ளக்காதலன்!. லாட்ஜில் பெண்ணை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடியது அம்பலம்!