உல்லாசமாக இருக்க சென்றநிலையில், லாட்ஜில் வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த தர்மாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து,கூடுவாஞ்சேரி, நந்திவரத்தில் பெற்றோருடன் வசித்தார். இந்த நிலையில், ஜெயராஜ், 28, என்பவருடன் பழகிவந்துள்ளார். இவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, அடிக்கடி தனியாக லாட்ஜில் அறை எடுத்து அவ்வபோது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதேபோல், , கடந்த22ம் தேதி மாமல்லபுரத் தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியுள்ளனர். மாலை 3:00 மணியளவில், ஜெயராஜ் வெளியே சென்று மீண்டும் அறைக்கு திரும்பியபோது, சங்கீதா மின் விசிறியில் துப்பட்டாவால் துாக்கிட்டநிலையில், இறந்து தொங்கியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சங்கீதாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சங்கீதா கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜெயராஜிடமும் விசாரணை மேற்கொண்டனர், அப்போது இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் உணவு வாங்க நான் வெளியே சென்ற நேரத்தில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று கூறினார். இவரது பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கிடுக்குப்பிடி விசாரணையில் ஜெயராஜின் நாடகம் அம்பலமானது.
அதாவது, உல்லாசமாக இருக்க விடுதியில் அறை எடுத்தோம். அப்போது சங்கீதா கழிவறைக்கு சென்றபோது அவரது மொபைல் போனை பார்த்தபோது, அவருக்கு நிறைய பேருடன் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதனால், இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஜெயராஜ், விடுதியில் அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெரித்து கொன்று, தற்கொலை நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
Readmore: விரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்..!! வாரம் ஒருமுறை கடைபிடித்தால் போதும்..!!