11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திற்கான பட்டியலை ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. அதன்படி 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் தரமான புகைப்படங்களை இணைத்தல் போன்ற பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் செய்யப்பட்டன. இதையடுத்து, அதன் பிறகு அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று வாக்காளர்கள் பட்டியில் வெளியீடு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் 1, 51, 857 ஆண் வாக்காளர்களும், 1, 53, 973 பெண் வாக்காளர்கள், 78 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3,05,908 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சேலம் மேற்கு தொகுதி உள்ளது. ஓமலூர் தொகுதி 2வது இடத்திலும், எடப்பாடி தொகுதி 3வது இடத்திலும் உள்ளது.

Readmore: அரசிராமணியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்..!! பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து நடவடிக்கை..!!