வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, அவர்களுக்கே தெரியாமல் பணத்தை கொள்ளையடித்து வந்த வங்கி மேலாளர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்திபனூர் அருகில் உள்ள ஹரிஜன் பரளை கிராமத்தை சேர்ந்தவர் பிரபாவதி. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்திபனூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கிக் கணக்கு துவங்கி வாடிக்கையாளராக இருந்து வருகிறார். இந்த வங்கியின் மேலாளராக அருண்குமார் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர், வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, அவர்களுக்கு தெரியாமல் கடன் பெறுவது, திரும்ப செலுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த வகையில், தன்னுடைய சேமிப்பு கணக்கில் வீட்டுக் கடனாக சுமார் 18 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பிரபாவதி குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறையில் புகார் கொடுத்த தகவல் தெரிந்ததால், அருண்குமார் வீட்டுக் கடனை திரும்ப செலுத்திவிட்டதாக தெரிகிறது. மேலும், இதுபோன்று பல்வேறு வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து போலியான கையொப்பமிட்டு, பணத்தை சுருட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பார்த்திபனூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஊழல் நடந்து வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரபாவதி கூறியுள்ளார். மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் அருண்குமார் மீது பார்த்திபனூர் காவல்துறையில் புகார் அளிக்கச் சென்றால், தன்னை விரட்டுவதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் பிரபாவதி தெரிவித்துள்ளார். எனவே, தென் மண்டல காவல்துறை தலைவரிடம் புகாரளித்துள்ளார். இந்த புகார் மனு மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்ததாக பிரபாவதி கூறியுள்ளார்.

Read More : ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் பெற்றுள்ளீர்களா?. கூடுதல் கட்டணம் விதிப்பா?. அதிகாரிகள் கூறுவது என்ன?.