1. மாநில அரசின் நிதியில் செயல்படும் பல்கலைக்கழகங்களில், வேந்தர் பதவி மட்டும் மத்திய அரசு பிரதிநிதிக்கா? என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கேள்வி. கல்வி உரிமையை மீட்கும் வரை போராட்டங்கள் தொடரும் எனவும் திட்டவட்டமாக அறிவிப்பு.
2. பரந்தூரில் மக்கள் பாதிக்கப்படாத வகையில், விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு விளக்கம். நிலம் வழங்கியவர்களுக்கு ரூ.35 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
3. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்.
4. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை. ஆளுநரும், அரசும் தீர்வுகாண அவகாசம் அளித்திருந்திருந்த நிலையில், இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு.
5. டங்ஸ்டன் விவகாரத்தில் நாளை தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்.
6. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி.
7. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதால், இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி. நேற்று ஒரே நாளில் 7 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.
8. முதல் டி20 போட்டியில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை. டி20 தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தீவிரம்.
9. ஈரோடு இடைத்தேர்தலில் பெரியார் கொள்கைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா..? திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
10. வள்ளுவரையும், வள்ளலாரையும் களவாட காத்திருக்கும் கூட்டத்தை தடுக்கும் அரணாக தமிழர்கள் இருக்க வேண்டும். திருவள்ளுவரை யாரும் கபளீகரம் செய்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.