பூலாம்பட்டியில் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (25) என்பவர், கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில், 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்தாண்டு ஆகஸ் 17ஆம் தேதி அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து சிறுமிக்கு விக்னேஷ்குமார் தாலிக்கட்டியுள்ளார். பின்னர், இருவரும் தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அவருக்கு திடீரென கடந்த 25ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதால், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், சிறுமி என்பதால் இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி விசாரணை நடத்தினார்.
அதன்பேரில் சிறுமியை குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக காதல் கணவன் விக்னேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.