தமிழ்நாடு அரசு மகளிருக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மகளிர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும் கொடுத்த வங்கி கணக்குக்கு பணம் வரவில்லை என்பது போன்ற புகார்கள் எழுகின்றன.
நீங்களே கூட தெரியாமல் மிகப்பெரிய தவறுகளை செய்திருக்க வாய்ப்புகள் உண்டு. அதாவது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வங்கி கணக்கை கொடுத்திருப்பது அல்லது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு, செயல்படாத வங்கி கணக்காக இருக்கலாம். இதையெல்லாம் பயனாளியான நீங்கள் தான் கொடுக்கப்பட்ட தகவல் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும்போது பழைய வங்கி கணக்கு கொடுத்துவிட்டீர்கள் என்றால் என்ன செய்யலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் : தமிழ்நாடு அரசு குடும்ப அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கொடுத்து வருகிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் இந்த திட்டத்தில் சுமார் 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மாதந்தோறும் பயன்பெற்று வருகின்றனர். புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இருப்பினும் ஏற்கனவே விண்ணப்பித்த எல்லோருடைய மனுக்களையும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
விண்ணப்பதாரர்களின் மனுக்களை கவனமாக பரிசீலுக்கும் அரசு, சில பல காரணங்களுக்காக விண்ணப்பதாரர்களின் மனுக்களை நிராகரிக்கவும் செய்கிறது. அரசு நிர்ணயித்த தகுதிகளை பூர்த்தி செய்யாதவர்கள், முறையான தகவல்களை கொடுக்காதவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும்.
தவறான வங்கி கணக்கு எண் மாற்றும் முறை : ஒருவேளை உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தும் பணம் வரவில்லை என்றால், நீங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பழைய வங்கி கணக்கு எண்ணாக இருக்கலாம். அதாவது, செயல்படாமல் இருக்கும் வங்கி கணக்கு எண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு நீங்கள் முதலில் உங்கள் வங்கி கணக்கு எண் மீண்டும் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். வங்கிக்கு சென்று முறையான ஆவணங்களை சமர்பித்து வங்கி எண்ணை ஆக்டிவேட் செய்யுங்கள். அல்லது புதிய வங்கி கணக்கை தொடங்கவும். அதன்பிறகு இ சேவை மையத்துக்கு சென்று வங்கி கணக்கு எண் மாற்றப்பட்ட விவரத்தை சொல்லி, பாஸ்புக் அப்டேட் செய்யுங்கள்.
மகளிர் உரிமை தொகைக்கு தேவையான ஆவணங்கள் : ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கும்போது உங்கள் விண்ணப்பம் எதனால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது, பணம் எதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற தெளிவான காரணத்தை அறிந்து, ஆவணங்களை சமர்பித்தால் உங்களுக்கான மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.
Readmore: வாவ்!. இனி ரேஷன் கடைகளிலும் பணம் சேமிக்கலாம்!. வங்கி அக்கவுண்ட் தொடங்க முடிவு!.