திண்டுக்கல் அருகே செயலி மூலம் வீடியோ காலில் பேசிய சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கிய வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தனியார் பள்ளியுக் பயின்று வரும் 14 வயது மாணவி, விளையாட்டாக தோழிகளுடன் சேர்ந்து செல்போனில் ஓமெகில் (Omegle App) எனப்படும் வீடியோ கால் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதுமட்டுமால்லாமல், அதன்மூலம், அறிமுகம் இல்லாத நபர்களுடன் மாணவி பேசி வந்துள்ளார்.
இந்தநிலையில், மாணவிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், சேலஞ் செய்வதாக கூறி, மாணவியை ஐ லவ் யு என சொல்ல வைத்துள்ளார். இதனை பதிவு செய்துகொண்ட அந்த நபர், ஐ லவ் யு என பேசிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். வீடியோ வைரலானதால் அதிர்ச்சியடைந்த சிறுமி மற்றும் அவரது பெற்றோர்கள், அந்த நபரை தொடர்பு கொண்டு விடியோவை நீக்குமாறு எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த வீடியோவை நீக்கிய நபர், சில நாட்கள் கழித்து மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட கொடைக்கானல் காவல்துறையினர், சிறுமியின் வீடியோவை பகிர்ந்து ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த தினேஷுராம் (வயது 23) என்பது தெரியவந்ததையடுத்து, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தினேஷ் இதுபோல பல சிறுமிகள், இளம்பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்தும் நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னர் தினேஷை போலீசார் சிறையில் அடைத்தனர்.
Readmore: ஆப்பிள், ஆரஞ்சு பழங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் எதை குறிக்கிறது..? இந்த பழங்களை வாங்கலாமா..?