டியூசனுக்கு சென்ற 15 சிறுவனை காதல் வலையில் வீழ்த்தி பாண்டிச்சேரிக்கு ஓடிய 22 வயது இளம்பெண்ணை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். 10 ம் வகுப்பு பயின்று வரும் இவர், அருகில் உள்ள டியூசன் சென்டரில் பயின்று வருகிறார். இந்தநிலையில், டியூசன் முடிந்து வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, செல்போனின் சிக்னலை வைத்து சிறுவன் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார், உடனடியாக பாண்டிச்சேரிக்கு விரைந்தனர்.

அங்கு, சிறுவனுடன் இளம்பெண் ஒருவர் இருந்த 22 வயது இளம்பெண்ணும் இருந்த நிலையில், விசாரணையில் அவர் சிறுவனின் காதலி என தன்னை அறிமுகம் செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அதிகாரிகள், போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 22 வயது இளம்பெண்ணை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதாவது, இளம்பெண் தனது அக்காவின் டியூஷனில் படிக்க வந்த 15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்தி பாண்டிச்சேரி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இளம்பெண், இவர்களுக்கு உதவியாக இருந்த மற்றொரு மாணவர் ஆகியோர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர்.

Readmore: 4 சகோதரிகள், பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த இளைஞர்..!! ஓட்டலில் 5 பேர் சடலமாக மீட்பு..!! அதிர வைக்கும் பின்னணி..!!