4வது முறையாக கருத்தரித்த இளம்பெண் ஒருவர், வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்தபோது எதிர்பாராத விதமாக தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். தச்சுத்தொழில் செய்து வரும் இவருக்குத் திருமணமாகி ஜோதி என்ற மனைவியும் ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், ஜோதி 4-வது முறையாகக் கர்ப்பமாகியுள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாய்க்கால் பட்டறையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த ஜோதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லை என்பதால், அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து பெற்றெடுத்த பெண் குழந்தை இறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, ஜோதிக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இறந்த பிஞ்சு குழந்தையை அப்பெண் பீரோவுக்கு அடியில் வைத்து மறைத்துள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற பெற்றோர்கள் ஜோதி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ஜோதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் 7 மாதம் ஆனபிறகுதான் ஜோதி தாய்மை அடைந்திருந்தது அவரதுகணவர் தமிழ்ச்செல்வனுக்குத் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜோதியின் பெற்றோருக்குத் தனது மகள் கருவுற்றிருக்கிறாள் என்பது தெரியாமல் இருந்து வந்துள்ளனர். மேலும் பிரசவத்தின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து காவல் துறையினர் வீட்டை ஆய்வு செய்த போது குழந்தை பீரோவிற்கு அடியில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
Readmore: குளிர்காலத்தில் தலைவலியால் கடும் அவதிப்படுகிறீர்களா?. என்ன காரணம்?. தவிர்க்க என்ன வழி?