வாழப்பாடி அருகே பெண்களை முறத்தால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்தில் பேய் விரட்டும் வினோத திருவிழா நடந்தது. இதையொட்டி மிராசு கொண்ட பூசாரி குடும்பத்தினர் ஒருவாரம் விரதம் இருந்தனர். தங்களது முன்னோர் வடிவமைத்துக் கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து மேள வாத்தியம் முழங்க ஆற்றங்கரைக்கு சென்றார். அங்கு பேய் விரட்டும் வினோத திருவிழா நடந்தது. அதாவது, திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

அவர்களில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பூசாரி தலைமுடியை கையில் பிடித்துக்கொண்டு முறத்தால் 3 முறை அடிப்பார். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்படுவர். இந்த பேய் விரட்டும் திருவிழாவை காண அந்த பகுதி மக்கள் ஏராளமானவர்கள் பொன்னாரம்பட்டி கிராமத்தில் திரண்டு இருந்தனர். காலங்கள் மாறினாலும் இந்த கிராமத்தில் காணும் பொங்கலன்று இந்த வினோத திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது

Readmore: சினிமாவை மிஞ்சிய பயங்கரம்!. பட்டப்பகலில் ஏடிஎம்மில் துப்பாக்கிச்சூடு நடத்தி பணம் கொள்ளை!. வங்கி ஊழியர் பலியான சோகம்!