குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினருக்கும் இதயம், நரம்பு, சிறுநீரகம் தொடர்பான அறுவை சிகிச்சைகளை பெற முதலமைச்சரின் இலவச காப்பீடு திட்ட அட்டை உதவுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு இந்த அட்டைமூலம் கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த அட்டை மூலமாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை பெற முடியும்.

ஆண்டு வருமானம் 1,20,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பங்கள், முதலமைச்சரின் இலவச காப்பீடு திட்ட அட்டையை பெறலாம். வருமான சான்று, குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அங்கு சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் குடும்ப தலைவரின் பெயரில் காப்பீடு அட்டைக்கான 22 இலக்க எண்ணை கொடுக்கப்பார்கள்.

ஒருவேளை காப்பீடு அட்டை வருவதற்கு முன்னதாகவே மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், 22 இலக்க எண்ணைக் கொண்டு சிகிச்சை பெறலாம். குடும்பத் தலைவரின் பெயரில் வழங்கப்படும் காப்பீடு அட்டை மூலம், குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றிருக்கும் அனைவரும் பயன்பெற முடியும்.

இத்திட்டத்தில் பயன்பெறத் தேவையான தகுதி: இத்திட்டத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர். தகுதியுடைய நபரின் குழந்தைகள். தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள். இந்த நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

உதவி மையம் : இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Readmore: சொத்து தகராறில் அண்ணன் மருமகளை தாக்கி கொலை மிரட்டல்!. திமுக கிளை செயலாளரின் அடாவடி!. ஆட்சியரிடம் பரபரப்பு மனு!