ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 வருடங்களை எட்டியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியானது கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவும் செய்தார். இந்த சூழ்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இளம் வயதில் திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்றார்.

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே ஈவிகேஎஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த மாதம் காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :

ஜனவரி 10 – வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஜனவரி 17 – வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

ஜனவரி 18 – வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை

ஜனவரி 20 – வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்

பிப்ரவரி 5 – வாக்குப்பதிவு

பிப்ரவரி 8 – வாக்கு எண்ணிக்கை

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் :

இதேபோல், டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்.5ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: ஆடு அறுப்பது போல் பெரியப்பாவின் தலையை அறுத்துப் போட்ட வாலிபர்..!! உடல் அருகிலேயே கத்தியுடன் காத்திருந்த தம்பி மகன்..!! நடந்தது என்ன..? சேலத்தில் பகீர்..!!