தென்காசியில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், சிவகிரி, அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராமேஸ்வரன் மனைவி பாஞ்சாலி (39). நேற்றிரவு இவர் சிவகிரி மெயின்ரோட்டில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற ஒருவர் பாஞ்சாலியிடம் தகராறு செய்ததோடு அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த பாஞ்சாலி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் வாசுதேவ நல்லூரை சேர்ந்த கூலித் தொழிலாளி சமுத்திரவேல் (44) என்பவர், பாஞ்சாலியை கத்தியால் குத்திக் கொலை செய்தது, தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் சமுத்திரவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில், கணவரை விட்டு பிரிந்து வாழும் பாஞ்சாலிக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. இதனால் பாஞ்சாலியிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் அவர், மகன்கள் பெரியவர்களாகி விட்டதால் ஆசைக்கு இணங்க மறுத்தார். இந்நிலையில், அவர் கடைக்கு வந்தபோது நான் அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். அவர் மறுக்கவே சரமாரியாக கத்தியால் குத்தினேன் என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சமுத்திரவேலை போலீசார் சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Readmore: இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா?. ரூ.931 கோடி சொத்துகளுடன் இவர்தான் முதலிடம்!. CM ஸ்டாலினுக்கு எந்த இடம்?.