ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும்போது சராசரியாக ஒரு ஆண் தன் வாழ்நாளில் 17 நிமிடங்களையும் ஒரு பெண் 22 நிமிடங்களையும் இழப்பதாக லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வின்படி, ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும்போது சராசரியாக ஒரு ஆண் தன் வாழ்நாளில் 17 நிமிடங்களையும் ஒரு பெண் 22 நிமிடங்களையும் இழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்காதவர்களின் வாழ்நாளோடு புகைப்பிடிப்பவர்களின் வாழ்நாள்களை ஒப்பிடுகையில், சுமார் 10 -11 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 10 சிகரெட்டுகளை புகைப்பவர்கள், ஒரு வாரம் மட்டும் விட்டுவிடுவதன் மூலம் ஒரு நாளை இழப்பதைத் தடுக்கலாம் என்றும், எட்டு மாதங்களுக்குத் தவிர்ப்பதன் மூலம் ஒரு மாத ஆயுளைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பவர்களிடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பேர் புகைப்பிடித்தல் தொடர்பான நோயினால் இறந்துள்ளனர். இங்கிலாந்தில் மட்டும் புகைப்பிடித்தல் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 80,000 பேர் இறக்கின்றனர். இங்கிலாந்தில் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Readmore: Happy New Year 2025 | புதிய தொடக்கங்கள் அனைத்தும் வெற்றிகளாக மாறட்டும்..!! Idp7 News சார்பாக உளம் கனிந்த வாழ்த்துகள்..!!