நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கலையொட்டி, அரிசி கார்டுதார்ரகளுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 1715 ரேஷன்கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக 10.71 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. இதற்காக டோக்கன் விநியோகம் ஜனவரி 9ம்தேதி முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் 1,715 ரேஷன் கடைகள் மூலம் 10.71 லட்சம் அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம், ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் வீடு தோறும் ஜனவரி 9ம் தேதி முதல் தொடங்குகிறது. பொங்கல் பரிசு தொகுப்புக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை ஆகியவை ரேஷன் கடைக்கு அனுப்பும் பணி விரைவில் தொடங்க உள்ளது. கரும்பு கொள்முதல் செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது,’ என்றனர்.

Readmore: ஆங்கில புத்தாண்டையொட்டி களைகட்டிய கொங்கணாபுரம் சந்தை..!! ரூ.25,000 வரை விலை போன ஆடு..!! ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்..!!