தற்போது வீட்டில் பல சாதனங்கள் இருப்பதால் மின் கட்டணம் அதிகமாக வருகிறது. இதற்காக சிறிய நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் சரியான மாற்றுகளை தேர்வு செய்வது உங்கள் மின் நுகர்வை குறைக்க உதவும். உங்கள் மின்சார கட்டணத்தை சேமிக்க பல வழிகள் உள்ளன. இதற்காக சரியான மாற்றுகளை தேர்வு செய்து ஆற்றல் சேமிப்பு (Saving energy) செய்வது சுற்றுச்சூழலுக்கும் உதவும். கரண்ட் பில்லை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய முதல்படி உங்களால் முடிந்தவரை மின்சாரம் வீணாவதை தவிர்க்க வேண்டும். இது தவிர உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க உதவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

அதிகளவு மின்சாரத்தை இழுக்கும் குறைந்த திறன் கொண்ட பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும். அதற்கு பதில் சிறிது விலை அதிகமாக இருந்தாலும், அதிக திறன் கொண்ட வீட்டு உபயோக எலெக்ட்ரிக் சாதனங்களை வாங்குவது நல்லது. ஈரமான துணிகளை அல்லது முடியை காய வைக்க உலர்த்தியை பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக உங்கள் காற்றில் காய விடுவது நல்லது. இதன் மூலம் கூடுதல் மின்சாரம் இயக்கப்படுவதை தடுக்கலாம்.

அதிக மின்சார உபயோகத்தை தவிர்க்க வீட்டில் சோலார் பேனல்களை வைப்பது பற்றி யோசித்து பாருங்கள். முதலில் இதற்கு நிறைய பணம் செலவாகும் என்றாலும் நீண்ட காலத்திற்கு இது உங்கள் மின் கட்டணத்தில் நிறைய சேமிக்க உதவும். மின்சாரத்தை சேமிக்க உங்கள் குடும்பத்திற்கும் சொல்லி கொடுங்கள். ஆட்கள் இல்லாத சமயத்தில் தேவையில்லாமல் ஓடும் பேன் மற்றும் லைட் போன்றவற்றை அணைத்தாலே பாதி செலவை கம்மி செய்யலாம்.

சமையல் அறையில் பயன்படுத்தும் சிம்னி அதிக அளவு கரன்டை இழுக்கும். மின்சார கட்டணம் குறைவாக வர வேண்டும் என நினைப்போர் சிம்னியை அளவுடன் பயன்படுத்தலாம்.கரன்ட்டை அதிகம் சாப்பிடுவதில் ஹீட்டர் முக்கிய இடம் வகிக்கிறது. இதன் பயன்பாட்டை குறைப்பதால் பில்லை குறைக்க முடியும். ஹீட்டர் பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்த்து மாற்று வழியை கையாளலாம். அல்லது குறைந்த நேரம் பயன்படுத்தி ஆஃப் செய்து விடலாம்.

Readmore: புதருக்குள் அலறல் சத்தம்!. ஏரிக்குள் வைத்து மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!. தலைக்கேறிய போதையால் இளைஞர் வெறிச்செயல்!.