வடமாநில கடைக்காரர்களை குறிவைத்து ஜிஎஸ்டி ஆபிஸர் என்று கூறி பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர், இவரது கடைக்கு டிப்டாப்பாக உடை அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர், நான் ஜிஎஸ்டி அதிகாரி எனக் கூறி சோதனை செய்வதாக கடைக்குள் சென்றுள்ளார். பொங்கல் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். மேலும், ஜிஎஸ்டி முறையாகச் செலுத்துகிறீர்களா? எனக் கடையில் இருந்த பணியாளரை மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் நடத்திவரும் கடைகளுக்கு சென்று ஆய்வுசெய்து தனக்கு பணம் வேண்டும் என வெளிப்படையாகக் கேட்டு வந்துள்ளார்.

மேலும் உங்களிடம் எந்த ரசீதும் இல்லை என்றால், ரூ.2,000 இருந்தால் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். அதற்குக் கடையிலிருந்த பணியாளர், என்னிடம் பணமில்லை எனக் கூறியுள்ளார். அதைக் கேட்ட அந்த நபர் கடையிலிருந்து கிளம்பி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த கடைக்காரர், சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த அந்தநபரின் புகைப்படத்தை வாட்ஸ் அப் குருப்-களில் பகிர்ந்துள்ளார். இதேபோல், மற்றொரு கடைக்கு சென்ற அந்த நபரை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி கடைக்காரர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: வீட்டிற்கு தெரியாமல் திருமணம்..!! 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப்பான காதல் கணவன்..!!