உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால், குழந்தைகள் அடித்து கொடுமைப் படுத்தியை தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் ஏலூரு மாவட்டம், ஜங்கா ரெட்டி பகுதியை சேர்ந்தவர் சசி. கருத்துவேறுபாட்டால் கணவரை பிரிந்த சசி 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே, சசிக்கு, அதே பகுதியை சேர்ந்த பவன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சசியின் குழந்தையால் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டதால் குழந்தைகளை பவன் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதாவது குழந்தைகளை கடுமையாக தாக்குவது, மிளகாய்பொடி கலந்த சாதத்தை சாப்பிட வைப்பது, காயமடைந்த இடத்தில் மிளகாய்பொடியை தடவுவது உள்ளிட்ட கொடுமைகளை செய்து வந்துள்ளார்.
இதையடுத்து, கடும் கோபத்தில் இருந்த பவன், ஸ்மார்ட்போன் சார்ஜர் கொண்டு கடுமையாக தாக்கி, காயத்தில் மிளகாய்பொடி தடவி கொடுமை செய்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குழந்தைகளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். இதுமட்டுமல்லாமல், தான் பெற்ற குழந்தைகளை கள்ளக்காதலன் அடிக்கும்போது கூட சசி அமைதியாக இருந்துள்ளார். இதையடுத்து கொடூர அரக்கன் பவனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க 35 அதிகாரிகள் நியமனம்!. தமிழக அரசு அறிவிப்பு!