கைவிட்டு சென்ற கணவரின் விட்டின் முன்பு மனைவியின் உடலை அவரது உறவினர்கள் எரியூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பொன்னன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணமாகி ஓராண்டுக்குள் விட்டுச் சென்ற பலனிராசு என்பவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளி மாவட்டத்தில்வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், மனமுடைந்த புவனேஸ்வரி தனது தந்தை வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

மேலும், கணவர் விட்டு நினைத்து மன உளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் துயரத்திற்கு உள்ளான உறவினர்கள் புவனேஸ்வரியின் உடலை பழனிராஜனின் வீட்டிற்கு முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு ஒப்படைக்கப்பட்ட புவனேஸ்வரன் உடலை அவரது உறவினர்கள் பழனிராஜனின் வீட்டிற்கு முன்பு வைத்து தகனம் செய்துள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சமந்தப்பட்ட பழனிராஜனை கைது செய்ய வேண்டும் என புவனேஸ்வரியின் உறவினர்கள் தெரிவித்தனர்

Read More : நீர்வழிப் பாதையில் கொட்டப்படும் குப்பை…! நோய் தொற்று ஏற்பாடு அச்சத்தில் பொதுமக்கள்…!! கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..?