ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய கள்ளக்காதலன் மறுத்ததால், போதையில் காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வடபழனியில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவர், இரவு நேர கிளப்பில், டான்சராக வேலை பார்த்துவருகிறார். இந்தநிலையில், இந்த பெண்ணுக்கும் வடபழனி அழகிரி நகரில் மூன்றாவது தெருவில் வசித்து வரும் கேட்டரிங் பணியாளர் அறிவழகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அறிவழகனுக்கும் திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இந்தநிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். மேலும், அறிவழகன் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து உல்லாசம் அனுபவித்து இருக்கிறார்.
இதையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி, அப்பெண் அறிவழகனிடம் கேட்டுள்ளார். இதற்கு, அறிவழகன் எனது மனைவியை விட்டுவிட்டு உன்னை திருமணம் செய்யமாட்டேன். நாம் எப்போதும்போல தனிமையில் சந்திக்கலாம் என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெண் அறிவழகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, இருவரும் சம்பவத்தன்று இரவில் இருவரும் சந்தித்து மது அருந்தியபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடபழனி காவல்நிலையத்திற்கு சென்ற அப்பெண், எனது ஆண் நண்பர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து உல்லாசமாக இருந்து, இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார்.
இரவு நேர பணியில் இருந்த பெண் காவலர் ஆர்த்தி, பெண்ணை காலையில் வந்து எழுத்துப்பூர்வ புகார் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அந்த பெண் திடீரென பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, பெண்ணின் கணவர், கள்ளக்காதலன் அறிவழகன் ஆகியோரை நேரில் வரவழைத்து ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் காவல் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.