தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் வரும் 27ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, தமிழகத்தில் மொத்தமுள்ள 34,774 ரேஷன் கடைகளும் இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலை கடைகளிலும் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களும் ரேஷன் பொருட்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமுதம் பல்பொருள் விற்பனை அங்காடி மூலம் ரேஷன் கடைகளில் ரூ.499 விலையில் 15 மளிகை பொருட்கள் கிடைக்கும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். அதேபோல், தீபாவளிக்கு தங்கு தடை இன்றி நியாய விலை கடைகளில் பொருட்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு பொருட்கள் உள்ளன. பொருட்கள் இல்லை என்ற நிலை எங்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Readmore: வாகன ஓட்டிகளே உஷார்!. ஏற்காட்டில் பகல் நேரத்திலேயே கடும் பனிமூட்டம்!.