சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு வயது 27. இவர், முடிவெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர், 15 வயதாகும் பள்ளி மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாகவும், இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதை கேட்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார். மேலும், இதுபற்றி தனது தந்தையிடம் கூறுவதாக மாணவி தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு பயந்துபோன அய்யப்பன், அதன் பிறகு மாணவி பக்கமே திரும்பி பார்க்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அந்த பள்ளி மாணவியை அய்யப்பன் பின் தொடர்ந்துள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்படி இல்லையென்றால், உனது புகைப்படத்தை ஆபசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன மாணவி, இச்சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அய்யப்பன் மீது சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா, அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.