பல்வேறு பெயர்களை வைத்து, அடுத்தடுத்து ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

மருதமலை படத்தில் போலீஸாக இருக்கும் வடிவேலுவிடம் பெண் ஒருவர் பிராது கொடுக்க வரும் காமெடி அல்டிமேட் தான். அதாவது, 5 கணவர்களும் வரிசையாக வந்து அந்த பெண்ணின் கணவராக வடிவேலுவிடம் அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவரும் பெண்ணை தன்னுடன் அனுப்புமாறு கேட்பார்கள். கடைசியில் சீட்டு குலுக்கிப் போட்டு ஒரு கணவருடன் அனுப்பி வைப்பார். இதுபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது கணவர் சிலம்பரசன். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன், ரேணு ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பரசன் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு மீரா என்ற பெயரில் அறிமுகமாகி, தான் ஒரு செவிலியர் என்று கூறி புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நெப்போலியன் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சில நாட்களில் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். பின்னர், நிஷாந்தினி என்று தனது பெயரை மாற்றிக்கொண்ட அந்த பெண், சிதம்பரத்தை சேர்ந்த ராஜா என்பவரையும் தன் வலையில் வீழ்த்தியுள்ளார். அதாவது, தான் MBBS MS படித்துவிட்டு சிதம்பரம் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றிவருவதாக கூறி அவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் சிறிது காலம் வாழ்ந்து விட்டு, பணி நிமித்தமாக தான் கோயம்புத்தூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து பெண் குறித்து எந்த தகவல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், சீர்காழி திட்டை பகுதியை சேர்ந்த சிவசந்திரன் சிதம்பரம் மெடிக்கல் காலேஜில் தனது தாயாரின் சிகிச்சைக்காக சென்ற போது அங்கு சிவசந்திரன் என்பவருடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 3 திருமணங்கள் ஆனதை மறைத்து, அவரையும் வற்புறுத்தி கடந்த ஜனவரி 20 -ம் தேதி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதவிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நெப்போலியன், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார், தீவிர விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ஒரே பெண் பெயர்களை மாற்றி ஊர் விட்டு ஊர் சென்று 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Readmore: எடப்பாடி அருகே வாகனங்கள் பறிமுதல்!. ரூ.2.50 லட்சம் அபராதம் விதிப்பு!. வரி செலுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை!.