மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியது வைரலாகி வருகிறது.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழா பொதுக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் எஸ்.பி. வேலுமணி ஜெயலலிதா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயலலிதா குறித்து பேசிய வேலுமணி, ” 2011, 2016ல் தொடர் ஆட்சி அமைத்தார் அம்மா (மறைந்த முதல்வர் ஜெயலலிதா). அவரின் உயிரைப் பற்றிக்கவலைப்படாமல் ஆட்சியை அமைத்தார். அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றிருந்தால், இன்று நலமுடன் இருந்திருப்பார்.
அவர் கேட்கவில்லை. கட்சி நன்றாக இருக்க வேண்டும், ஆட்சியும் இருக்க வேண்டும் என அவர் சட்டப்பேரவையில் பேசினார். அவர் உடல்நலனை பற்றி நாங்கள் சொல்வதையும் கேட்கவில்லை. எங்களையெல்லாம் அன்று எம்.எல்.ஏ ஆக்கி அழகு பார்த்தார். மேலும் இந்த கட்சியும் ஆட்சியும் 100 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும் என சட்டசபையில் ஜெயலலிதா பேசினார்” என்று எஸ்.பி வேலுமணி பேசியிருக்கிறார்.
Readmore: சுகர் இருக்கா?. இனி வெள்ளை அரிசியை தொடாதீங்க!. இந்த அரிசியில்தான் சத்துக்கள் அதிகம்!.