வழிபாட்டு முறைகளில் விரதம் இருப்பது என்பது மிக முக்கியமான பாரம்பரியமான முறையாக கருதப்படுகிறது. இறைவனை நெருங்கிச் செல்வதற்கான மிக சிறந்த வழியாகவும், நம்முடைய பாவங்கள் நீங்கி, இறைவனின் திருவடிகளை அடைவதற்கும் ஏற்ற வழியாக விரத முறைகள் கருதப்படுகிறது. விரதங்கள் இருப்பதால் நம்முடைய கெட்ட கர்மவினைகள் நீங்கி, புண்ணிய பலன்கள் அதிகரிப்பதாகவும், இறைவனின் அருள் கிடைப்பதாகவும் முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மற்ற மதங்களை விட இந்து மதத்தில் அதிகமான விரதங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. வருடத்திற்கு ஒரு முறை கடைபிடிக்கப்படும் விரதங்கள் மட்டுமின்றி, மாதந்தோறும் கடைபிடிக்கப்படும் விரதங்களையும் அதிகமான மக்கள் கடைபிடிக்கிறார்கள். அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, சதுர்த்தி, ஏகாதசி, திருவோணம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கார்த்திகை ஆகிய பத்து விரதங்கள் ஒவ்வொரு மாதமும் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த ஒவ்வொரு விரதமும் ஒவ்வொரு விதமான பலன்களை நமக்கு வழங்கக் கூடியவை ஆகும்.

ஆனால், வாரத்தில் ஒருநாள் விரதம் கடைபிடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இந்த விரத முறை நம் உடலை சமநிலைப்படுத்த உதவுகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்தில் ஒரு நாள் விரதம் இருந்தால் பல நோய்கள் விலகும் என தெரியவந்துள்ளது. அதாவது இன்றைய வாழ்க்கை முறை உணவு பழக்கங்களில் அதிக உடல் பருமனால் பலர் அவதிப்படுகின்றனர். எடையை குறைக்க அதிக உடற்பயிற்சி செய்து உடலை வருத்திக்கொள்கின்றனர். வாரம் ஒருமுறை விரதம் இருந்தால் விரைவில் உடல் எடை குறையும் என்கின்றனர் நிபுணர்கள். இது வளர்ச்சிதை மாற்றத்தை துரித்தப்படுத்தி, எடை இழப்புக்கு உதவுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. அதாவது கலோரிகளை குறைக்க விரதம் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வாரம் ஒருமுறை விரதம் இருந்தால் இதயக் கோளாறுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. விரதம் இருப்பதால், செரிமான அமைப்புக்கு ஒரு குறுகிய இடைவெளியை அளிக்கிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாரத்தில் ஒரு நாள் விரதம் இருந்தால், செரிமான அமைப்பு பிரச்சனைகள் நீங்கும். நம் உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் வெளியேறும்.

வாரத்திற்கு ஒரு முறை உண்ணாவிரதம் இருப்பது குளுக்கோஸ் எதிர்ப்பைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உண்ணாவிரதம் இரத்த சர்க்கரையை 3-6 சதவீதம் குறைக்கிறது. விரதம் இருந்தால் முதுமை வேகம் குறைந்து ஆயுட்காலம் கூடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எலிகளுக்கு உண்ணாவிரத முறை வழங்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில், அவை மற்ற எலிகளை விட 83 சதவீதம் நீண்ட காலம் வாழ்கின்றன. சிலர் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் முக்கிய உறுப்புகளுக்கு ஆபத்து அதிகம். உண்ணாவிரதத்திற்கு அடுத்த நாள், அவர்கள் முந்தைய நாள் சாப்பிடாததை விட அதிகமாக சாப்பிடுகிறார்கள். இப்படி செய்வது நல்லதல்ல.

(பொறுப்புத் துறப்பு : இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவை. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இந்த தகவல்களுக்கு Idp7News பொறுப்பேற்காது.)

Readmore: பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற பைக்!. ஹாரன் அடித்ததால் ஆத்திரம்!. ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்!.