தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவது சகஜம். ஒரு உறவில் ஆழமாக சென்றுவிட்டால், மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. தனிநபர்கள் தனித்துவமான அனுபவங்கள், மதிப்புகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டிருப்பதால், வெவ்வேறு கண்ணோட்டங்கள் கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். சில சமயங்களில், தம்பதிகள் தகராறு செய்து, சமரசம் செய்து கொள்ளலாம். அன்றாட வாழ்க்கையில், இதுபோன்ற பல ஜோடி சண்டை சம்பவங்களை நாம் சந்திக்கிறோம். சமீபத்தில், இதுபோன்ற ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு ஆணும், பெண்ணும் சாலையில் திடீரென அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு பைக் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது, அதில் வந்த ஒரு ஆணும், பெண்ணும் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை திடீரென சண்டையில் முடிந்தது. ஆத்திரமடைந்த அந்த நபர், அந்த பெண்ணை அடித்து, கண்ணத்தில் அறைந்து கீழே தள்ளி கொடூரமாக தாக்குகிறார். தொடர்ந்து அந்த பெண்ணும், அந்த நபரை அடிக்கிறார். இவர்களின் சண்டையை அருகில் சாலையில் சென்றவர்கள் பார்த்துக்கொண்டே சென்றனர். ஒரு கட்டத்தில் அக்கம்பக்கத்தினர் கூடி அவர்களிடம் சமரசம் பேசினர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் அதே வண்டியில் ஒன்றாக சென்றனர். இந்த சம்பவத்தை அருகில் உள்ள கட்டிடத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் மொபைலில் பதிவு செய்துள்ளார். கர் கே காலேஷ் என்ற பயனர் இது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.