பொங்கல் பண்டிகையையொட்டி, நடத்த கிரிக்கெட் போட்டியில் ரன் எடுக்க ஓடியபோது திடீரென மயக்கமடைந்த மைதானத்திலேயே இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன்படி, பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கிரிக்கெட் போட்டியில் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன் (46), நில புரோக்கரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான ஜான்சன், பொங்கல் பண்டிகை முன்னிட்டு மீளவிட்டான் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார். போட்டியின் போது ரன் எடுக்க ஓடிய போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்