மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் கல்வராயன் மலை பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனத்திற்காக தனியார் பேருந்தில் சென்றுள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம் அருத்தங்குடி புதூர் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின் கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்து விபத்துக்குள்ளானதை அறிந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கும், மற்றவர்களை அவரவர் இல்லங்களுக்கும் தமது ஏற்பாட்டில் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தார்.

Readmore: அதிமுக ஆட்சியில் வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கியில் முறைகேடு செய்த வழக்கு!. மேலும் 3 பேர் கைது!.