கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு கேட்கப்பட்ட குதிரையை, விற்க மறுத்த நாமக்கல்லை சேர்ந்த உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வீரா வரதராஜன். குதிரை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், குதிரை ஒன்றை வாங்கி வளர்த்து வந்துள்ளார். 5 வயதில் வாங்கப்பட்ட குதிரை நல்ல கவனித்து தினமும் குதிரைக்கு சத்தான உணவு மற்றும் பல்வேறு பயிற்சிகள் அளித்து வந்துள்ளார்.

இதையடுத்து, குதிரையை பல்வேறு மாநிலங்களில் நடக்கும் கண்காட்சிக்கு பங்கேற்க அழைத்து சென்றுவருவதை வாடிக்கையாக இருந்துள்ளார். அந்தவகையில், மகாராஷ்டிராவில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்பதற்காக குதிரையை கொண்டு சென்றுள்ளார். அப்போது, குதிரையை கண்டு ரசித்த பார்வையாளர்கள் அதனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் இந்த கண்காட்சியில் காது, கழுத்து, உடல் அழகு, கால் அழகில் முதல் பரிசு பெற்ற குதிரையை அம்பானி குரூப் நிர்வாகத்தினர் ரூ.1 கோடிக்கு வாங்க பலர் முன்வந்தனர். இருப்பினும் இதனை விற்க மனமில்லை என்று வரதராஜன் கூறினார். இவரது பாசப்போராட்டம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: லஞ்சம் கேட்ட காவலர்..!! வீடியோ வைரலானதால் விபரீத முடிவு..!! அம்மாப்பேட்டை சாலையில் உறவினர்கள் போராட்டம்..!!