உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்க TANGEDCO இணையதளமான https://www.tnebltd.gov.in/mobilenoentry/ பார்த்து அறியலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பொது மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், தமிழக மின்வாரியம் நிறைய நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.. குறிப்பாக, கரண்ட் பில் கட்டண விவரங்களை அறிய புதிய செயலியை நடைமுறைப்படுத்தியிருந்தது. அதேபோல, மின் கட்டணத்தை செல்போன் போன் வாயிலாக, எங்கிருந்தபடியும், எப்போது வேண்டுமானாலும் செலுத்துவதற்கு ‘TANGEDCO’ செல்போன் செயலியை, கடந்த 2018ல் மின்வாரியம் அறிமுகம் செய்திருந்தது.. இந்த செயலியை, ‘கூகுள் பிளே ஸ்டோர்’ வாயிலாக, மின் நுகர்வோர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. இந்த செயலியில் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வசதியும், கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரியில் துவங்கப்பட்டது. அதாவது மின் கட்டணம் செலுத்துவது, புகார்கள் அளிப்பது என இரட்டிப்பு வசதிகள் இந்த செயலியில் உள்ளன.
தமிழ்நாட்டில் எங்கு மின் தடை ஏற்பட்டாலும் சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். அப்படி குறைகளை தெரிவிக்கும் போதே, உங்கள் மொபைல் எண் மின்வாரியத்தின் இபி கனெக்சனுடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்களிடம் எந்த விவரமும் கேட்காமலேயே மின்சாரம் உங்கள் ஏரியாவில் எப்போது வரும், மின்தடை உள்ளதா என்பதை எளிதாக மின்வாரியத்தில் இருந்து கூறிவிடுவார்கள்.
இதுதவிர மின்வாரியத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு மின்சார பில் இந்த மாதம் எவ்வளவு வந்துள்ளது என்பது எஸ்எம்எஸ் ஆக வந்துவிடும். அத்துடன் மின்தடை ஏற்பட போகிறது என்றாலோ அல்லது மாதாந்திர மின்தடை ஏற்பட போகிறது என்றால் உங்களுக்கு முன்னதாகவே எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். எனவே எளிதாக மின்சார வாரியத்தின் அனைத்து தகவல்களையும் பெற முடியும். எனவே உங்கள் மொபைல் எண்ணை உடனே அப்டேட் செய்ய https://www.tnebltd.gov.in/mobilenoentry/ என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
நீங்கள் தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் என்றால் அதில் ‘Owner cum Occupant mobile number’ ( ‘உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர் மொபைல் எண்’) என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை வாடகைக்கு குடியிருப்பவர் என்றால் Occupant என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் சர்வீஸ் எண், மொபைல் நம்பரை கொடுத்து சப்மிட் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய, OTP உங்கள் வீட்டின் உரிமையாளருக்கும், உங்களுக்கும் அனுப்பப்படும். ஒடிபியை பதிவிட்டால் உடனே அப்டேட் ஆகிவிடும். ஒருவேளை வீட்டின் உரிமையாளரின் எண் தவறானதாக இருந்தால் அல்லது கிடைக்கவில்லை என்றால், உரிமையாளரின் மொபைல் எண் புதுப்பிக்கப்படும் வரை, குடியிருப்பாளரால் அவர்களின் எண்ணை அப்டேட் செய்ய முடியாது.