சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேசிபி வாடகை கட்டணத்தை உயர்த்தக் கோரி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமையிலும், துணை தலைவர் செந்தில்குமார், செயலாளர் சதீஷ், துணைச் செயலாளர் ராமசாமி ஆகியரது முன்னிலையிலும் இந்த போராட்டம் நடந்தது.

இதில், தேவூர் பேரூராட்சி, கோணக்கழுத்தானூர், காணியாளம்பட்டி, அம்மாபாளையம் புதுப்பாளையம், பெரமாச்சிபாளையம், அரசிராமணி பேரூராட்சி எல்லப்பாளையம், செட்டிபட்டி, ஒடசக்கரை, குள்ளம்பட்டி ஓலப்பாளையம், ஆலத்தூர், ரெட்டிபாளையம், காவேரிபட்டி ஊராட்சி சென்றாயனூர், மொத்தையனூர், கத்தேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஜேசிபி உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஜேசிபி வாகனத்தின் டீசல் உதிரி பாகங்கள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் புதிய வாகனத்தின் விலை உயர்வு, சாலை வரி உயர்வு போன்ற காரணங்களால் ஜேசிபி உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், ஜேசிபியின் வாடகை கட்டணத்தை ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,500ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென 2-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More : மகளிர் உரிமைத்தொகை..!! ரூ.1,000 கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்..!! அமைச்சர் கீதா ஜீவன் சொன்ன குட் நியூஸ்..!!