சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமையில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 12) சென்னை பல்கலைக்கழகத்தில் “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

முதல்வர் உத்தரவுப்படி, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கத்தோடு, போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

Read More : அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!!