தீபாவளி பண்டிகை இன்று நாடுமுழுவதும் மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளில் நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இந்த பொருட்களை பரிசாக கொடுக்காதீர்கள். அதாவது, இன்றைய நாளில் கடவுள் சிலைகளை பரிசாக கொடுக்க விரும்பினால், கண்டிப்பாக விநாயகர் மற்றும் மகாலட்சுமியின் சிலைகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு சிலைகளும் செல்வ வளங்களை கொடுக்கக்கூடியது. எனவே உங்கள் கைகளால் இந்த சிலைகளை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது உங்களிடம் இருக்கும் தன வரமும் பணவரமும் மற்றவர்களுக்கு சென்று விடும் என்பது நம்பிக்கை. அதைப்போல் விநாயகர், லட்சுமி இணைந்திருக்கும் புகைப்படத்தையும் மற்றவர்களுக்கு பரிசளிக்கக் கூடாது. இது வருமானத் தடைக்கு ஒரு காரணமாக அமைந்து விடக் கூடும்.

இந்த நாளில் இரும்பு உள்ளது எஃகு சம்பந்தப்பட்ட பொருட்களை தானமாகவோ அல்லது பரிசாகவும் மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.‌ இரும்பு சனி பகவானுடன் தொடர்புடையது. எனவே இரும்பு பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது நாம் அவர்களுக்கு சனியனை கொடுப்பதாக பொருள் படுகிறது. நம்மிடம் இருக்கும் பீடைகளை அவரிடம் கொடுப்பதாக ஆகிவிடுகிறது. ஆனால் அலுமினிய உலோகத்தால் ஆன பரிசு பொருள்களை மற்றவர்களுக்கு தாராளமாக கொடுக்கலாம். இதில் செய்யப்பட்ட பரிசு பொருட்களை கொடுக்கும் பொழுது உறவு நீண்ட காலம் நீடிக்கும்.

பயன்படுத்திய பொருள்களையோ உடைகளையோ நல்ல நிலையில் இருந்தால் அதை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் அந்த பொருளில் சிறிய அளவில் பாதிப்பு இருந்தாலும் கிழிந்திருந்தாலோ அதை நிச்சயமாக மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.சனி உடைய தொடர்பிருப்பதால் கருப்பு நிற உடைகளை மற்றவர்களுக்கு தானமாகவோ பரிசாகவோ கொடுக்கக் கூடாது. எண்ணெய், உப்பு, புளி போன்றவற்றை யாருக்கும் தானமாகவோ அன்பளிப்பாகவோ வழங்கக்கூடாது. யாரேனும் அவசர உதவிக்கு இந்தப் பொருள்களை கேட்டால் கூட அவர்களிடம் சில தொகையைப் பெற்றுக் கொண்டு தான் கொடுக்க வேண்டும். இந்த பொருட்களை தானம் செய்வது மூலமாக மகாலட்சுமியின் அருள் தடைப்படுவதற்கு காரணமாக அமைகிறது.

தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், பித்தளை போன்ற ஐந்து உலோகங்களால் செய்யப்பட்ட பொருள்களையோ நகைகளையோ மற்றவர்களுக்கு இந்த நாளில் பரிசாக வழங்கக்கூடாது. தனியாக தங்கமாகவோ வெள்ளியாகவோ பரிசாக வழங்கலாம். ஆனால் ஐந்து உலோகங்களும் கலவையாக செய்யப்பட்ட பொருட்களை கொடுக்கக்கூடாது. இந்த பஞ்ச உலோக பொருட்களை மற்றவர்களுக்கு தானமாகவோ பரிசாகவோ அளிக்கும்போது உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டம் நீங்கி விடும்.

Readmore: பெங்களூரு To சங்ககிரி வரை..!! சூட்கேஸில் பயணித்த சிறுமியின் உடல்..!! ஐடி தம்பதி போட்ட பலே பிளான்..!! செக் வைத்த போலீஸ்..!!