நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நாளைமுதல் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வட தமிழக கடலோர பகுதியை நோக்கி அடுத்த 48 மணிநேரத்தில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிக கனமழையும் திருவள்ளூர் ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர்,தஞ்சை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி புதுக்கோட்டையில் கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் வரும் 16 ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினத்தில் இந்த மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், அக்.16ல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் அக்.17ல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நாளைமுதல் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.