ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டை மட்டுமில்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் அவசியமாக உள்ளது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியம்.

பெரும்பாலான மக்களிடம் இப்போது பழைய ஆதார் கார்டே இருக்கும். அதாவது, 10 வருடங்களுக்கு முன் ஆதார் கார்டு புதிதாக வாங்கியிருப்பார்கள். அப்படி ஆதார் கார்டு வாங்கி 10 ஆண்டுகள் ஆகியிருந்தால் அதை அப்டேட் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் தற்போதைய தகவல்களாகவும் அப்டேட்டுடன் இருக்க வேண்டும். ஆதாரில் உள்ள முகவரி தவறாக இருந்தால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக இல்லாவிட்டால் அரசின் உதவிகளைப் பெறமுடியாது.

10 ஆண்டுகள் பழமையான ஆதார் கார்டைப் புதுப்பிக்க இப்போது எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான காலக்கெடு செப்டம்பர் 14ஆம் தேதியே முடிவடைந்துவிட்டது. ஆனால் அது தற்போது டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுந்து வருகிறது. எந்த குடும்ப உறுப்பினரின் ஆதார் கார்டை வேண்டுமானாலும் ஒரே மொபைல் நம்பருடன் இணைக்க முடியும். ஒரே மொபைல் நம்பருடன் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ஆதார் இணைப்பிற்கு ஒரு முக்கிய உறுப்பினரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: தீபத் திருவிழா!. ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்குவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!. தி.மலை ஆட்சியர்!.