சென்னை அடுத்த தியாகராய நகரில் நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்த சில நாள்களிலேயே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகளை திருடிவ தப்பியோடியுள்ளார். இதனையடுத்து, அப்பெண்ணை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 22-ஆம் தேதி நகைக்கடையில் வேலைக்குச் சென்ற ரேவதி என்ற பெண் மூன்றாம் தேதி முதல் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, சந்தேகமடைந்த கடை உரிமையாளர் கடையில் உள்ள நகைகளை சோதனை செய்துள்ளார். அப்போது ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் களவு போனது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் தனது கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது ரேவதி நகைகளை திருடுவது தெரிய வந்தது.
இதனையடுத்து, சம்பவம் குறித்துகாவல் நிலையத்தில் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் பணியில் சேர்வதற்காக கொடுத்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்பதும் தெரிய வந்தது. மேலும், தான் நகையை திருடியது உரிமையாளருக்கு தெரியவில்லை என நினைத்து கடையை தொடர்பு கொண்டு வேலை செய்த நாட்களுக்கு ஊதியம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
Read More:சாப்பாட்டில் புழு, பூச்சி…! ஹாஸ்டல் மாணவர்களுக்கு நடக்கும் அவலம்..!!