பரமக்குடியில் உள்ள திருவேட்டை உடைய அய்யனார் கோயிலை வடிவேலுவின் உதவியுடன் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றளவும் வடிவேலுவின் இடத்தை நிரப்ப எவரும் இல்லை என்றே கூறலாம். சிறிது காலம் ஓய்வில் இருந்த வடிவேலு, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்துவருகிறார். நடிகர் வடிவேலு தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் மாரீசன் படத்திலும் சுந்தர்.சி இயக்கும் கேங்கர்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது குலதெய்வ கோயிலை அபகரிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், திருவேட்டை உடைய அய்யனார் கோயில் இருக்கிறது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இக்கோயில் வடிவேலுவின் குலதெய்வ கோயில் என்று கூறப்படுகிறது. அதே போல் காட்டுபரமக்குடி கிராமத்தின் பூர்வீக கோயிலாகவும் இருந்து வருகிறது.

இந்தநிலையில், வடிவேலுவின் தூண்டுதலின்பேரில் கோயில் அறக்காவலர் பாக்யராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வடிவேலுக்கு சொந்தமான கோயிலாக மாற்றம் செய்ய முயற்சி செய்து வருதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் காட்டுபரமக்குடி கிராம மக்கள் நேற்று கோயில் முன்பு திரண்டு வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அவர் அந்த கிராம மக்களிடம் கலந்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Readmore: திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பக்தர்களுக்கு விபூதி அடித்த வெப்சைட்..!! இத்தனை வருஷமா இது தெரியாம போச்சே..!! கோடிக்கணக்கில் பணம் சுருட்டல்..!!