தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. இந்தநிலையில் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அதிகரித்து வருவதால் நிரப்பப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Group 4 தேர்வுக்கான அறிவிப்பை 30.01.2024ம் தேதி வெளியிடப்பட்டது. ஏராளமானோர் இப்போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்தநிலையில், தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக்கழக உதவி மேலாளர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15-லிருந்து 14 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், அக்கழக உதவி பொறியாளர் (சிவில்) பதவியில் உள்ள பணியிடங்கள் 19-லிருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு மின் பகிர்மான கழக (மின்சார வாரியம்) உதவி பொறியாளர் எலெக்ட்ரிக்கல் பிரிவில் 195 இடங்களும், சிவில் பிரிவில் 30 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 25 இடங்களும் (மொத்தம் 250 தற்போது புதிதாக சேர்க்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,235 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் இடஒதுக்கீடு வாரியான காலியிடங்கள், வயது வரம்பு போன்ற விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.