தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி வெள்ளாண்டிவலசு ஆதி பரம்பரை காவடி குழுவினர் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வரும் இந்த ஆன்மிக யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவடிகளை சுமந்து பழனிக்கு புறப்பட்டனர். எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள வெள்ளை பிள்ளையார் கோயிலில் சிறப்பு யாக பூஜையுடன் தொடங்கிய இந்த பாத யாத்திரையில் காவடி சுமந்த பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக யாத்திரை மேற்கொண்டனர். இவர்கள் முதலில் எடப்பாடியை அடுத்த வெள்ளூற்றுப் பெருமாள் கோவிலில் இரவு முழுவதும் தங்குவார்கள்.
பின்னர் அங்கிருந்து பள்ளியபாளையம் காவிரி கரை பகுதி, ஈரோடு மாவட்டம் சென்னிமலை மலைக்கோயில், காங்கயம் அருகே உள்ள வட்டமலை முத்துக்குமார சுவாமி கோவில், தாராபுரம் அமராவதி நதிக்கரை, திண்டுக்கல் பாலாற்று நதிக்கரை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜைகள் செய்து பழனிக்கு செல்வார்கள். நடைப்பயணமாக சென்று பழனி மலைக்கோவிலை அடைந்து அங்கு, மூலவருக்கு அபிஷேகம் செய்ய சிறப்பு பஞ்சாமிர்தம் தயார் செய்கின்றனர். பின்னர் அதை தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து அதனை பிரசாதமாக பெற்று ஊர் திரும்புவார்கள்.
Readmore: