திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து கடவுள் முருகனிடம் வழிபட போகிறேன். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன். திமுக அரசைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு எனது இல்லத்தில் நானே எனக்கு 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன். அதேபோல், நாளை ஒவ்வொரு பாஜகவினரின் வீட்டிலும் போராட்டம் நடக்கும்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமராவுக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக கூறுவது வெட்கமாக இல்லையா? நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டும் அங்கு ஏன் சிசிடிவி இல்லை..? நான் காவல்துறையில் இருந்திருந்தால், சுட்டு தூக்கிப் போட்டிருப்பேன். திமுக அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும். மரியாதை கொடுத்து பேசி வருகிறேன். வீதிக்கு வந்து பேசினால் வேறு மாதிரி பேசுவேன். அந்த எப்.ஐ.ஆரை படித்தால் ரத்தம் கொதிக்கிறது.

முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியானது..? அதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரம் வெளியே விட என்ன காரணம்..? குற்றம் செய்த அயோக்கியனை விட்டுவிட்டு, அந்த மாணவியை குற்றவாளி போல் FIRஇல் காட்டிருக்காங்க. ரகசியமாக அந்த பெண் காதலனை சந்தித்து முத்தம் கொடுத்ததாக FIRஇல் குறிப்பிட்டு, அதையும் இணையத்தில் பதிவிட்டுருக்காங்க.. வெக்கமா இல்லையா..? காக்கி சட்டையை போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா..? என்று சரமாரியாக பேசியுள்ளார்.

Read More : தொடர் விடுமுறை..!! பூலாம்பட்டிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு..!! கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!!